எல்லாச் சூழ்நிலைகளுக்கும், எல்லா வேளைகளுக்கும் அது பொருந்தாது.
1. ’வெறும் வயிறோடுதான் பூஜை செய்ய வேண்டும்’ என்று சொல்வார்கள்.
2. குளித்து விட்டுத்தான் பூஜை செய்ய வேண்டும் என்பார்கள்.
எல்லாச்
சூழ்நிலைகளுக்கும், எல்லா வேளைகளுக்கும் அது பொருந்தாது.
**
துன்பம் நெருங்கும் போதெல்லாம் பூஜையில் உட்காருங்கள். சோதனை
நேரும் போதெல்லாம் உட்காருங்கள். அடுத்தவர் மீது கோபம் வரும்போது உட்காருங்கள்.
** சந்தோஷம் வரும் போது நன்றி செலுத்துவதற்காக
உட்காருங்கள். நோயுற்றபோது நோய் தீரப் பிரார்த்தனை செய்வதற்காக உட்காருங்கள்; நோய்
தீர பிரார்த்தியுங்கள்.
புறந்தூய்மை
வெறும் தண்ணீரால் அமைகிறது;
அகந்தூய்மைதான்
உங்கள் வாய்மையில் காணப்படவேண்டும்.
பக்தி தத்துவம்
பயன் மிக்கது.
பாவிகளையும்
துரோகிகளையும் விட்டு விலகி நிற்கப்
பரமேச்வரனைச்
சரணடையுங்கள்.
*** பிறப்பிற்கு முன்னால்
அவனிடம்தான் இருந்தோம்;
இறப்புக்குப் பின்னால் அவனிடம்தான் போகப்போகிறோம்.
*********
No comments:
Post a Comment