அமாவாசை அன்று தர்பணம், தானம், தர்மம் செய்வதால் மிகவும் புன்னியம் கிட்டும்.
தர்பணம்:
ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்பணம் செய்வதே சிறந்தது. அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில் குளக்கரையில் தர்பணம் செய்வதே நன்று நீர் ஓடும் ஆறு, நதி, கடற்கரை ஆகிய இடங்களிலும் செய்வது சிறப்பானதாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று "ஆத்ம சாந்தி" வழிபாடு செய்யலாம்.
தானம் தர்மம்:
அன்று காலையில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை தானம் செய்வது மிகவும் பலன் தரும். |
மகாளய பட்சம் அன்று காபி அல்லது சிற்றுண்டிக்கு உட்கொள்ளும் முன்னர் பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் மூதாதையர் ஆசி் கிடைக்கும்.காகம் அன்னம்:
அன்று மதியம் வாக்கில் காகத்திற்கு அன்னம் வைத்தல் மிகவும் புன்னியத்தை தரும்
திதி நிர்ணயம் தொடர்பாக தற்பொழுது கிடைக்கும் நூல்கள்
ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் அவர்களின் ஸ்ம்ருதி முக்தாபலம்:
ச்ராத்த காண்டம், திதி நிர்ணய காண்டம் உட்பட ஏழு காண்டங்கள் அடங்கிய நூல் தொகுப்பு (விலை Rs. 2500)
No comments:
Post a Comment