செந்தூர் மாசித்திருவிழா

முருகப்பெருமான், சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அம்மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவர் முருகப்பெருமான்.
இதை வெளிப்படுத்தவே, முருகன் கோவில்களில் மாசித் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும், மாசிக்கும், முருகனுக்கும் மற்றொரு தொடர்பும் உண்டு. இம்மாதத்தின் பூசம் நட்சத்திரத்தில் தான், வள்ளியை மணந்து கொண்டார் முருகன்.
மாசித் திருவிழாவுக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தலம், திருச்செந்தூர். இத்திருவிழாவின்போது, சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் காட்சி தருவார். விழாவின், 7ம் நாளன்று மாலையில், சிவப்பு நிற வஸ்திரம் அணிந்து, சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலை, வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாகவும், மதியம், பச்சை வஸ்திரத்தில் பெருமாள் அம்சத்தில் பவனி வருவார். எல்லா தெய்வங்களின் அம்சமாகவும் விளங்குவதால், மாசி மாதத்தில் முருகனை வழிபட, கடலலை போல் பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுகின்றனர்.
திருச்செந்தூரில் முருகன் சன்னிதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமானோ கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால், கடல் அரிப்பைத் தவிர்க்க, மேற்கில் கோபுரம் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதே நேரம், கோபுரவாசல் மூடப்பட்டு உள்ளதால், மூலஸ்தான பீடத்தைவிட, கோபுர வாசல் உயரமாக இருப்பதால், அடைக்கப்பட்டதாகவும் தகவல் உண்டு.
பொதுவாக கோவில்களில், ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூரில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவா பெருமாள் என, முருகனின் நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை, 'மாப்பிள்ளை சுவாமி' என்கின்றனர். தங்கள் ஊருக்கு வந்து தெய்வானையை மணப்பெண்ணாக அடைந்த தால், செந்தூர் மக்கள் இவரை, மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மூலவர் சுப்பிரமணியர் சன்னிதிக்குள்ளும் ஒரு விசேஷம் உண்டு. மூலவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் உள்ளது. முதல் தீபாராதனை இவருக்கு காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சன்னிதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே பார்க்க முடியும்.
இதுதவிர மூலஸ்தானத்தின் வலப்புறத்தில், பஞ்சலிங்க சன்னிதி இருக்கிறது. முருகன் இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.
திருச்செந்தூர் மாசித் திருவிழாவிற்கு செல்பவர்கள், இந்த அற்புதங்களையும் கண்டு வாருங்கள். மனநிறைவான பயணமாக இருக்கும்.