Monday, 6 October 2014

ஆறு மனமே ஆறு.. ஆற்று மனமே ஆற்று..!!



மனமே நம் எண்ணங்கள் பொங்கிடும் ஜீவ ஊற்று. ஆம்! நம் ஜீவன் உள்ளவரை பொங்கியபடி இருக்கும் ஊற்று.   அதனை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

அப்போதே தூய எண்ணங்கள் பொங்கி வரும்; உள்ளம் தெளிவுறும்.
நம் உள்ளம் தெளிவுற தெளிவுற  நம் முகம் தாமரை மலர் போல மலர்ந்து தீட்சண்யத்துடன் ஒளி வீசும்.

எப்படி தூய்மையுடன் வைத்திருப்பது?

1. ஆறு மனமே ஆறு.  2. ஆற்று மனமே ஆற்று.

1. ஆறு மனமே ஆறு.
     
         விருப்பு- வெறுப்பு, அறிந்தது- அறியாதது, தேவையானவை- தேவையில்லாதவை , என்பன உணர்ந்து எண்ணங்கள் உருவாவதில்லை.. தோன்றுவன அனைத்தும் நனவாகிடுவன அல்ல..  மேலும் எண்ணங்களுக்கு தோன்றாதே என கட்டளையோ, சட்டமோ போடவும் இயலாது.

          என்ன  செய்யலாம்?  -  வரும் எண்ணங்கள் யாவையும் வரவில் (வரவு காலத்தில்) வைத்து,  அதன்மேல் பற்று எதுவும் (பற்று காலத்தில்) வைக்காமல் இருக்க வேண்டும். எப்படி?  நம் வாழ்க்கைக்கு சாத்தியமானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை செலவில் வைத்தல் வேண்டும். ஆம்,  வேண்டாதவற்றை விலக்கிடுதல் நலம் பயக்குமன்றோ!..

2.  ஆற்று மனமே ஆற்று.

             எல்லோராலும் கட்டுப்பாட்டுடன் இருந்திட இயலுமா?..  அதற்காகவே, இந்த ஆற்று மனமே ஆற்று.

              எப்படி?  

                 சிலர் தம் கற்பனா சக்திகொண்டு தோன்றிடும் எண்ணங்களை கற்பனையில் அதன் போக்கில் நினைத்து பார்த்து மகிழ்ந்திடுவர்.

                சிலர் தன் மனத்தினை தம் கட்டுப்பாட்டில் வைத்து,  தோன்றிடும் எண்ணங்களை விலக்கி வைத்து வெற்றி காண்பர். 

               சிலர் தன் எண்ணங்களை ஒத்து வெற்றி கண்டவர்களை கண்டு வழி அறிந்து , அதன்படி நடந்து வெற்றிக்கனியை பறிப்பர்.


No comments:

Post a Comment