முன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்டிக்க, தவறுதலாக அதிக பில் கட்டணம் வருதல் இது போன்ற இன்ன பிற பிரச்சனைகள். இதெல்லாம் ஒரே நாளில் முடிய கூடிய காரியமும் இல்லே. இதற்காக நம்முடைய சோலி எல்லாம் விட்டுட்டு அலைய வேண்டி வரும். லஞ்சமும் கொடுக்க வேண்டும் ஆனா வேலை மட்டும் சீக்கிரமா முடியவே ..முடியாது. அப்ப என்ன தான் பண்ணலாம்?
கவலையை விடுங்க.
கவலையை விடுங்க.
நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ள இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கென ஒரு புது கணக்கை (user account) உருவாக்குங்க.
அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிங்க.
புதிய கணக்கு உருவாக்க:
கீழேயுள்ள லிங்க் ஐ சொடக்கவும்
இணைய தளம் செல்ல இங்கே சொடக்கவும்
இணைய தளம் செல்ல இங்கே சொடக்கவும்
அதில் New User என்பதை கிளிக் செய்யவும்,
Region= உங்களது மாவட்டத்தை செலக்ட் செய்யவும், பின்னர் உங்களது EB எண்ணை கொடுக்கவும் உதாரணமாக 060 012 550 இது மாதிரி இருக்கும். இப்பொழுது உங்களது பெயர் மற்றும் முகவரி வரும். இதனை சரிபார்த்து நம்முடைய தான என உறுதி செய்த பின்னர் Confirm எனும் பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் இனி உங்களது பெயர், முகவரி, மின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அதில் கேட்க்கபட்டுள்ள அனைத்து தகவல்கள் கொடுத்து பின்னர் submit செய்யவும்.
இனி உங்களது மின் அஞ்சல் முகவரிக்கு ஒரு மின் அஞ்சல் வரும் அதனுடன் இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்த வுடன் உங்களது புதிய கணக்கு உயிர் பெற்று விடும். இனி நீங்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் இனி எளிமையான முறையில் ஆன்லைன் மூலம் கையாலாம்.
இந்த தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இருப்பதால் அனைவரும் எளிமையாக கையாளலாம்.
இந்த தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இருப்பதால் அனைவரும் எளிமையாக கையாளலாம்.
இந்த இணைய தளத்தின் வழியாக என்ன என்ன பயன்?
1) துரிதமாக கட்டணம்: ஆன்லைன் மூலம் எளிதாக பணம் செலுத்தலாம்.
2) கட்டணம் விபரம்: யூனிட் வாரியாக கட்டண விபரம் அறியலாம்.
3) ரசிது பெட்டகம்: மின் கட்டணத்திற்கான ரசிதை பிரின்ட் எடுக்கலாம்.
4) கணக்கு விபரம்: (இதில் நம்முடைய முழு முகவரி, மாதந்திர மின் கட்டணம் செலுத்திய விபரம், இதர கட்டணம் செலுத்திய விபரம் மற்றும் நிலுவையிலுள்ள கட்டண விபரங்கள், முன் பணம் செலுத்தி இருந்தால் அதன் விபரம் ஆகியவற்றை இங்கு முழு விபரமுடன் காணலாம்.
5) காப்புத்தொகை: உங்களது கணக்கிலுள்ள வைப்புத்தொகை மற்றும் வருடாந்திர வட்டி விகிதம் ஆகியவற்றை காணலாம்.
6) பில் விபரம்: இதில் எவ்வளவு யூனிட், எவ்வளவு பணம் அதன் விபரம்
7) எண் சேர்த்தல்: இங்கு நம்முடைய வீட்டு EB எண் மட்டுமில்லாமல் நம்முடைய உறவினர் வீட்டு எண்ணையும் சேர்க்கலாம், அதற்க்கான மின் கட்டணமும் செலுத்தலாம்.
8) எண் நீக்க: நாம் இணையத்தில் இணைத்த எண்ணை நீக்கவும் செய்யலாம்.
9) கடவு சொல் மாற்ற: நாம் கொடுத்த கடவு சொல்லை (password) மாற்றலாம்.
10) முகப்பு மாற்ற: இங்கு தங்களது இணையத்தில் பதிந்த சுய விபரத்தை மாற்றி கொள்ளலாம்.
11) உதவி மையம்: நம்முடைய சில சந்தேகளுக்கு இங்கு பதில் கிடைக்கும்.
12) பொது புகார்: நம்முடைய புகார் எதுவா இருந்தாலும் இங்கே ஆன்லைன் மூலம் தெரிவித்து அதற்க்கான தீர்வும் காணாலாம்.
13) புகார் நிலை: நம்முடைய புகார் எந்த நிலைமையில் உள்ளது எனவும் அறியலாம்.
அவ்வளவு தான் இனி E.B சம்பந்தபட்ட வேலைகளை வீட்டில்/ ஆபீஸில் இருந்து கொண்டே முடிங்க.. நேரத்தை மிச்சப்படுத்துங்க.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமன்ட் பாக்ஸில் கேளுங்க....
பிடிச்சா சேர் பண்ணுங்க....



No comments:
Post a Comment